- சவுரவ் சந்திதாஸ் கங்குலி (ஜூலை 08, 1972) இந்திய மட்டைபந்தாட்ட அணியின் முன்னாள் தலைவர். கொல்கத்தாவை சேர்ந்த இடதுகைத் துடுப்பாட்ட வீரரான கங்குலி 1991-92 இல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக பிரிஸ்பேன் நகரில் நடந்த ஒருநாள் ஆட்டத்திலும், 1996 இல் இந்திய டெஸ்ட் அணியிலும் அறிமுகமானார். தன் முதலிரு டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்துக்கு எதிராக சதங்களைப் பெற்றார்.
